close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த நாயகி யார் தெரியுமா?

Sunday, March 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தாரை தப்பட்டை' படத்திற்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் முடிவடைந்த 'வெற்றிவேல்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்தமணி இயக்கியுள்ள இந்த படத்தில் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார், அறிமுக இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை சசிகுமாரே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது முடிவாகியுள்ளது. சுஜா வருணி என்பவர் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதிர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment