திருமணம் குறித்து 'பிக்பாஸ்' சுஜா அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் புகழ் சுஜா வருணே, சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ்வை திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு சுஜா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தயவுசெய்து எனது நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் என் அன்புக்குரியவரை எப்போது திருமணம் செய்யவுள்ளேன் என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்.
திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களது நீண்டகால திட்டம். எனவே அதை வைத்து வதந்தியை கிளப்ப வேண்டாம். நாம் எல்லோரும் நண்பர்கள், ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்பவர்கள். எனவே எனது திருமணம் குறித்த செய்தியை நானே அறிவிக்கும் வரை தயவுசெய்து பொறுமை கொள்ளுங்கள்
தற்போது என்னுடைய முழு கவனமும் நான் நடித்த திரைப்படமான, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் புரமோஷனில் மட்டுமே. உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' என்று சுஜா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments