பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுஜாவின் முதல் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட சுஜா, முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பதிவு இது
மக்களின் பிரதிநிதி கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நன்றி. மேலும் விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் குழுவினர்களுக்கும் எனது நன்றி. முக்கியமாக எனக்காக நேரம் ஒதுக்கி என்னை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தவர்களுக்கும், எனக்கு ஊக்கமளித்தவர்களுக்கும் நன்றி. என்மீதான விமர்சனத்தை நான் பாசிட்டிவ் ஆகவே எடுத்து கொள்கிறேன். என்னை பற்றி கிண்டல் செய்த, கேலி செய்த மிமிக்களையும் நான் ரசித்தேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு கேம்ஷோ போலத்தான் நான் இறுதிவரை நினைத்தேன். சுயநலம் என்பது என்னிடம் இல்லை. நான் நானாகவே இருந்ததை கணேஷ் மற்றும் ஹரிஷ் தவிர வேறு யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை. கமல் சாரிடம் இருந்து பாராட்டு பெற்றதையே நான் வெற்றி பெற்றதாக நினைக்கின்றேன். அதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எனது பொன்னான நேரம்.
நான் எனது வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க போகிறேன். இறுதி நாளில் மீண்டும் சந்திப்போம். தயவு செய்து கவனமாக வாக்களியுங்கள். கடைசியாக எனக்கு வாக்களித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com