close
Choose your channels

'24'ஐ கடந்தது சூர்யாவின் '24'

Sunday, May 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய '24' திரைப்படம் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆகி அனைத்து பகுதிகளிலும் நல்ல ரிசல்ட்டை தந்துள்ள நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி '24' நாட்கள் முடிந்துவிட்டது. இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை இந்த படம் எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்ரேயா உள்பட மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யாவின் நடிப்பு இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அமெரிக்கா, கனடா உள்பட அனைத்து நாடுகளிலும் இந்த படம் பெருவாரியான வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தின் வெற்றியால் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் சூர்யா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் வெற்றி காரணமாக தமிழில் இனி அதிகளவில் டைம் மிஷின் குறித்த திரைப்படங்கள் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment