கல்யாணத்திற்கு பிறகு கள்ளக்காதலனுடன் குடித்தனம்....! மனைவியை மறந்து தற்கொலை செய்த காதலன்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு பின்பு கள்ளஉறவு வைத்துக்கொண்ட தம்பதி, போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரியில், நாகர்கோவில் அருகே சங்கரன்புதூரில் வசித்து வந்தவர் தான் சுரேஷ்குமார். 25 வயது நிரம்பிய இவர் தேரூர் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதிகளில், குப்பை வண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷின் மனைவி வித்யா.இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 31 வயதுள்ள இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
வேலை காரணமாக அடிக்கடி சந்தித்த வித்யா மற்றும் சுரேஷின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தன்னுடைய குடும்பத்தை மறந்த வித்யா, அந்த இளைஞருடன் வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயங்கள் சுரேஷின் பெற்றோருக்கு தெரிய அவரை கண்டித்து, நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கல்யாணம் ஆனால் தவறான உறவை முறித்துக்கொள்வார்கள் என நினைத்திருந்த பெற்றோருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
திருமணத்திற்கு பின் வித்யாவை மறக்க முடியாத சுரேஷ், அவ்வப்போது அவரை சந்தித்து வந்துள்ளார். இதையறிந்த வித்யாவின் கணவர் சுபாஷ்-ம், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத கள்ளக்காதல் தம்பதி, கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளம் என்ற ஊரில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இதன்பின் சுபாஷ், சுசீந்திரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகாரளித்திருந்தார். தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்கள் இருக்கும் பகுதியை கண்டறிந்து, பிடிக்க சென்றனர். இதையறிந்த இருவரும், காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இவர்களை நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 13-ஆம் தேதி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வித்யாவிற்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். அப்பாவியான குழந்தைகளின் நிலையும், புதிய மணப்பெண் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments