படிக்காமல் இருக்கும் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா??? விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட 19 வயது சிறுமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானா மாநிலத்தில் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத 19 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் அவர் பயின்று வந்த கல்லூரி திறக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த அவர் தன்னுடைய அப்பாவிடம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு பழைய லேப்டாப் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவரது தந்தையால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மெக்கானிக் தொழில் செய்த வருபவர் ஸ்ரீநிவாச ரெட்டி. இவருடைய 19 வயது மகள் ஐஸ்வர்யா. தனது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா 98.5% மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார். இந்நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இடம் கிடைத்து அங்கு படிப்பை தொடர்ந்து இருக்கிறார். கணிதத்தில் 2 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை படிந்து வந்த அவர் கொரோனா காரணமாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
ஊருக்குத் திரும்பி வந்த ஐஸ்வர்யா, தன்னுடைய குடும்ப வறுமையை நேரில் பார்த்து மனம் உடைந்து இருக்கிறார். இதனால் கடந்த 2 ஆம் தேதி ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் “ஏற்கனவே எனது குடும்பம் வறுமையில் தவித்து வருகிறது. இதில் என்னுடைய படிப்பு செலவு வேறு. நான் என்னுடைய அப்பாவிற்கு பாரமாக வாழ்ந்து வருகிறேன். எனவே என்னால் தொடர்ந்து படிக்க முடியாத நிலைமை ஏற்படலாம். படிக்காமல் என்னால் உயிர்வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” எனத் தெலுங்கில் உருக்கமாக எழுதி வைத்திருக்கிறார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நல்ல கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் தன்னால் படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout