சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம்: மகன் நந்தன் குறித்து சுஹாசினி கூறிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது மகனுக்கு சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் இருந்ததாக நடிகை சுகாசினி தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான மணிரத்னம் - சுஹாசினி தம்பதிக்கு நந்தன் தான் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் 15 வயதிலேயே லெனினிஸம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதும் இவருக்கு கம்யூனிசிய சித்தாந்தத்தில் மிகவும் ஆர்வம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகன் குறித்து சுகாசினி கூறியபோது 12 வயதிலேயே எனது மகன் பாராளுமன்ற உரைகளை கேட்பான், எனக்கே அதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும், 12 வயதிலேயே மூலதனம் என்ற புத்தகத்தை வாசித்தவன். ஒருநாள் சில புத்தகங்களோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டான். கம்யூனிஸ்ட் கட்சியில் தனது மகனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, எதிர்காலத்தில் அவன் அரசியலில் ஈடுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாசினி குடும்பத்தை சேர்ந்த கமல்ஹாசனே ஒரு அரசியல் கட்சி வைத்திருக்கும் நிலையில் சுகாசினி மகன் கமல் கட்சியில் சேருவாரா? அல்லது அவருக்கு பிடித்த கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com