சிம்புவின் பீப் பாடல் குறித்து சுஹாசினி மணிரத்னம் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு பாடியுள்ளதாக கூறப்படும் 'பீப் பாடலால் தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சிம்புவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ள வரை விவகாரம் முற்றியுள்ள நிலையில் இந்த பாடல் குறித்து பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்னம் மனைவியுமான சுஹாசினி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
'நாட்டில் நிறைய கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கும்போது ஒரு பாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குழம்பி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று எனக்கு தோன்றுகிறது. வெள்ள நிவாரண பணி, தேர்வுக்கு படிப்பது போன்ற மற்ற விஷயங்களில் அனைவரும் கவனத்தை செலுத்தலாம்
குறிப்பாக நமக்காக பணிபுரிந்த 10 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து கவலைப்படாமல் எப்போதும் சினிமா சினிமா என்று இருக்க வேண்டாம். சினிமாவில் இருக்கும் நானே இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடலாம் என்றே நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
சுஹாசினியின் கருத்தை ஏற்று பீப் பாடல் பிரச்சனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அனைவரும் கைவிடுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com