த்ரிஷா-சிம்ரன் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

தமிழ் திரையுலகின் சீனியர் நடிகைகளான த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகியோர் சகோதரிகளாக நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்கு 'சுகர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 'டைட்டில்' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா, சிம்ரன், சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். சரவணன் ராமசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவரும் தண்ணீருக்கடியில் நிகழும் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துள்ளதாகவும், இதற்காக இருவருக்கும் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
 

More News

ஆர்யாவின் அடுத்த படம் குறித்த ரிலீஸ் தகவல்

நடிகர் ஆர்யா, சூர்யாவுடன் நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவருடைய இன்னொரு படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது

சாக்சியை நாமினேட் செய்த கவின் - லாஸ்லியா: திட்டம் என்ன?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமை

பாம்பு, கீரியாக மாறும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் சில சமயம் சுவாரசியமாக இருந்தாலும் பல சமயம் எரிச்சலையே தரும் வகையிலேயே இருக்கும்.

சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' டிரைலரில் அஜித்-விஜய் வசனம்!

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தன்ராம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொளஞ்சி' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு இரட்டை வேட படங்களில் கமல்ஹாசன்?

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள