ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார்: சொல்வது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்தார். ஆன்மீக அரசியலில் தான் குதிக்கவுள்ளதாகவும், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பித்து அதன் நிர்வாகிகள் நியமனம் செய்வதிலும் பிசியாக ஈடுபட்டார். எனவே அவர் எந்த நேரத்திலும் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக மேலிடம் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பதிலாக அவர் அதிமுகவின் தலைமையை ஏற்று பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உறவினரான சுதீஷ், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அவர் கட்சி தொடங்க மாட்டார் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருவதால் இதனை தவிர்க்க எந்த ஒரு முடிவாக இருந்தாலும் இதுகுறித்து அவரே ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

More News

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து பாரதிராஜா

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்

நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான், உள்ளே நடப்பதே வேற! பிக்பாஸ் ரம்யா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் ரம்யா. பார்வையாளர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும் இந்த முடிவு எதிர்பாராத முடிவாகத்தான் இருந்தது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ராகுல்காந்திக்கு கமல் கற்று கொடுத்த பாடம் இதுதான்: அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்

'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள்

ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோ புகைப்பிடித்தால் ரசிகர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாக இதுவரை நெகட்டிவ் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது