ரஜினிகாந்த் எனக்கு உதவவில்லையா? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபலம் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்த சுதாகர் என்பவர் ரஜினியின் ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் சிறுநீரக புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் உதவவில்லை என இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தியை அடுத்து சுதாகர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது.
உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினிகாந்த். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். ரஜினிகாந்த் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது ரஜினியின் நல்லெண்ணத்தையும், குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்’ இவ்வாறு சுதாகர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
— Sudhakar (@SudhakarVM) November 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout