நடிகர் மாதவனுக்கு விருந்து வைத்த சுதா கொங்கரா.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவனுக்கு இயக்குனர் சுதா கொங்கரா விருந்து வைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இறுதிச்சுற்று’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’இறுதிச்சுற்று’ படத்திற்கு முன்பே மாதவன் மற்றும் சுதா கொங்கரா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆய்த எழுத்து’ என்ற படத்தில் மாதவன் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீண்ட நாள் நண்பர் மாதவனுக்கு சுதா கொங்கரா தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் மாதவன் கலந்து கொண்டதாக கூறி சுதா கொங்கரா வங்கை அன்னம், பொடி சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாதவனுக்கு தான் பரிமாறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த விருந்துக்கு நன்றி கூறிய நடிகர் மாதவன் ’நீங்கள் ஒரு அசாதாரண இயக்குனர் மட்டுமின்றி அசாதாரணமான சமைத்து விருந்தளிப்பவர் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்கள் அழகான இல்லத்தில் எனக்கு நீங்கள் பரிமாறுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சுதா கொங்கரா’ என்று தெரிவித்துள்ளார்.
When your extraordinary Director turns out to be an equally extraordinary, cook and host.. serves you with her own hands and in a beautiful beautiful home .. you know you have done some things right … thanks Sudhaaaaaaaa https://t.co/BZy2VV3vPE
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 14, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com