ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்குகிறேனா? இயக்குனர் சுதா கொங்கரா தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் சுதா கொங்கரா இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
பிரபல இயக்குநர் சுதா கொங்கரா தற்போது ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த படம் பிரபல விமான நிறுவன தொழில் அதிபர் ஜிஆர்கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்தப் படமும் ஒரு வாழ்க்கை வரலாறு படம் என்றும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் அபிஷேக்பச்சன் அல்லது சூர்யா நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். நான் ரத்தன் டாடாவின் மிகப் பெரிய ரசிகையாக இருந்தாலும் அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் நோக்கம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய அடுத்த படம் குறித்து நீங்கள் கேட்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அதுகுறித்த அப்டேட் விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
I’m a huge admirer of Mr. Ratan Tata. However I have no intention of making his biopic at this moment . But thank you all for your interest in my next film! Soon! ??
— Sudha Kongara (@Sudha_Kongara) December 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com