'புறநானூறு' படத்தில் சூர்யாவுக்கு பதில் இந்த மாஸ் நடிகரா? சுதா கொங்கராவின் வேற லெவல் திட்டம்..!
- IndiaGlitz, [Saturday,June 29 2024]
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ’புறநானூறு’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் திடீரென இந்த படம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் தான் ’கங்குவா’ படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்திற்கு சென்று விட்டார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சுதா கொங்கராவின் ’புறநானூறு’ திரைப்படம் டிராப்பா? அல்லது வேறு நடிகரை வைத்து அவர் இயக்க போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’புறநானூறு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தற்போது கமிட்டாகி உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு அதன் பின்னர் சுதா கொங்கராவின் ’புறநானூறு’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் இது அவரது நூறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.