'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பு நிறுவனத்துடன் சுதா கொங்காரா ஒப்பந்தம்? ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருக்கும் அடுத்த படம் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தற்போது அதுகுறித்த புதிய அப்டேட் வந்துள்ளது.

சுதா கொங்கரா இயக்க இருக்கும் அடுத்த படத்தை ’ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிறுவனம் ’கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’’சலார்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்காக சுதா கொங்கரா இயக்கும் திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் என்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த பான் - இந்தியா திரைப்படத்தில் அஜித் நடிப்பாரா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

முதல்முறையாக இணைகிறார்களா சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன்? தயாரிப்பாளர் இவர்தான்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

3 மில்லியன் பாலோயர்ஸ் பெற்ற நெகிழ்ச்சி....! நன்றி தெரிவித்த குக் வித் கோமாளி பிரபலம்...!

"குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ்.

அமைச்சராக இருந்தவர்… டெலிவரி பாயாக வேலை செய்யும் அவலம்!

பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ ஆப்கானிஸ்தான் அமைச்சராக இருந்த ஒருவர் தற்போது ஜெர்மனி சாலைகளில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வலம் வருகிறார்.

சிம்புவின் 'பத்து தல' படப்பிடிப்பு: வைரல் புகைப்படம்

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி, நடிகை, ...!

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பசீர்ஹட் தொகுதியில், எம்.பியாக  இருப்பவர்தான்  நுஸ்ரத் ஜஹான்.