close
Choose your channels

சுதா கொங்காராவின் அடுத்த படம் ரத்தன் டாடா பயோபிக்? நடிப்பது யார் தெரியுமா?

Tuesday, November 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குநர் சுதா கொங்கரா, ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் ரத்தன் டாடா கேரக்டரில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் பிரபல விமான நிறுவன தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டுமின்றி விருதுகளையும் குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சுதா கொங்கரா தற்போது இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கராவின் அடுத்த படம் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று கூறப்படுகிறது. இதில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அபிஷேக் பச்சன், அம்பானியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததால், டாடா வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான திரைக்கதை குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரத்தன் டாடா கேரக்டரில் நடிப்பது சூர்யாவா அல்லது அபிஷேக் பச்சனா? என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment