சுதா கொங்காராவின் அடுத்த படம் ரத்தன் டாடா பயோபிக்? நடிப்பது யார் தெரியுமா?

பிரபல இயக்குநர் சுதா கொங்கரா, ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் ரத்தன் டாடா கேரக்டரில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் பிரபல விமான நிறுவன தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டுமின்றி விருதுகளையும் குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சுதா கொங்கரா தற்போது இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கராவின் அடுத்த படம் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று கூறப்படுகிறது. இதில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அபிஷேக் பச்சன், அம்பானியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததால், டாடா வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான திரைக்கதை குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரத்தன் டாடா கேரக்டரில் நடிப்பது சூர்யாவா அல்லது அபிஷேக் பச்சனா? என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More News

'காந்தாரா' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும்

விக்ரமனுக்கு வழக்கறிஞர் ஆகும் செம போட்டியாளர்: களைகட்டும் கோர்ட் டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நீதிமன்ற டாஸ்க் வைக்கப்படுவது வழக்கமான ஒன்று என்றும் இந்த டாஸ்க்கில் காரசாரமாக போட்டியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக வாதாடுவார்கள் என்பதும் தெரிந்ததே

'துணிவு' படத்தை அடுத்து 'வாரிசு' படத்தையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: என்ன நடக்கும்?

வரும் பொங்கல் திருநாளில் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசாக இருக்கும் நிலையில் 'துணிவு' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்

தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை: ரஜினிகாந்த் அதிருப்தி

வெளிநாட்டவர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட தேவாவின் படைப்பு குறித்து தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் செய்திகள் வெளியாகவில்லை என ரஜினிகாந்த் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நமீதாவின் இரட்டை குழந்தைகள் பெயர் என்ன தெரியுமா? பெயர் சூட்டுவிழா புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா சமீபத்தில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்