close
Choose your channels

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் இளம் நடிகர் ஹீரோவா? அப்ப சூர்யாவின் 'புறநானூறு' என்ன ஆச்சு?

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் இந்த படம் சில காரணங்களால் தள்ளி போகும் என்று அறிக்கை வெளியானது என்பதும் இதனால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் ஒரு இளம் தமிழ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக ’புறநானூறு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் கால தாமதமாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் சுதா கொங்கரா - துருவ் விக்ரம் படம் இன்னும் உறுதி செய்யப்படாததால் அவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment