டுவிட்டரில் இணைந்த சுதா கொங்கராவிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா நேற்று டுவிட்டர் இணையதளத்தில் முதல் முறையாக இணைந்துள்ளார். நேற்று ஒரே நாளில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் 34 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்து உள்ளனர் என்பதும் அது மட்டுமின்றி சுதாவின் ட்விட்டர் பக்கத்தில் முதல் நாளே புளு டிக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் தனது முதல் டுவிட்டாக, ‘இதுதான் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அளித்துள்ள அஜித் ரசிகர்கள் ’அஜித் 63’ பட அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள் என்று கேட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் கூறியபோது சுதா கொங்கரா மற்றும் அஜித் ஒரு புதிய படத்தில் இணைவார்கள் என்றும், அஜித்திற்காக ஒரு மிகச் சிறந்த திரைக்கதையை சுதா வைத்துள்ளார் இந்த தகவல் வெளியாகும் போது பிரமிப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அஜித் ரசிகர்கள், ‘இது எப்போது நிகழும்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். சுதா கொங்காரா இந்த கேள்விக்கு விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
When it's going to happen mam?https://t.co/YIsomg6mhR
— Valimai_Thala (@Valimai_Thalaaa) March 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com