புகழ்பெற்ற நாவலின் உரிமையை வாங்கிய சுதா கொங்காரா? எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு புகழ்பெற்ற நாவலை திரைப்படம் ஆக்கும் உரிமையை இயக்குனர் சுதா கொங்காரா பெற்றுள்ள நிலையில் அந்த நாவலில் உள்ள ஹீரோவுக்கு பொருத்தமான நடிகர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுதா கொங்காரா, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் தற்போது அவர் ’வேட்டை நாய்கள்’ என்ற நாவலை திரைப்படம் ஆக்கும் உரிமையை பெற்றுள்ளார்.
நரேன் எழுதிய வேட்டை நாய்கள் என்ற நாவல் தூத்துக்குடி கடல் மற்றும் வளமான பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை கொண்டது. இது குறித்து சுதா கொங்காரா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
இந்த அற்புதமான கதையின் உரிமையை வாங்கிய பிறகு நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். நாவலின் திரைக்கதையை தொடங்கவும் ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு உண்மையிலேயே ஒரு உற்சாகமான பயணமாகும். நான் இதுவரை அனுபவித்திராத ஒரு வாழ்க்கையை இந்த படத்தின் மூலம் வாழ்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நாவலில் உள்ள ஹீரோவுக்கு பொருத்தமான நடிகர் யாராக இருக்கும்? என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் சுதா கொங்காரா உடன் இயக்குனர் வெற்றி மாறனும் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Naran’s Vettai Naaigal.
— Sudha Kongara (@Sudha_Kongara) September 15, 2024
A world rich and rooted in the seas and shores of Thoothukudi.
Having bought the rights to this marvellous story, I’m now Very very excited and eager to start on the screenplay of the novel…a journey that’s usually excruciating but exhilarating too.
I… pic.twitter.com/tmd8uUHGKp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments