சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் சுதாகொங்க்ரா இயக்கவிருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப் படத்தின் இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் சுதா கொங்கரா பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாகவும், நாயகியாக ராதிகா மதன் நடிக்க விருப்பதாகவும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ’சூரரைப்போற்று’ படத்தை அடுத்து மீண்டும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
A new begining… need all your love and blessings!! @akshaykumar @Sudha_Kongara @gvprakash @CaptGopinath @CapeOfGoodFilm @Abundantia_Ent @2D_ENTPVTLTD pic.twitter.com/R69zacDR70
— Suriya Sivakumar (@Suriya_offl) April 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com