close
Choose your channels

தமிழ் சீரீயலில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை சுதா சந்திரன்.. எந்த சீரியல்? எந்த டிவி?

Monday, September 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சுதா சந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சீரியலில் மீண்டும் இணைகின்றார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

1984 ஆம் ஆண்டு வெளியான "மயூரி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுதா சந்திரன். அந்த படம், அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பிறகு, ஏராளமான திரைப்படங்களில் நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தென்றல்", "தெய்வம் தந்த வீடு", "நாகினி", "மாரி" போன்ற சீரியல்களில் நடித்த நிலையில், சமீபத்தில் தெலுங்கு சீரியல்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழ் சீரியலில் மீண்டும் இணைகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கண்ணெதிரே தோன்றினாள்" தொடரில் அவர் மீண்டும் தோன்றியுள்ளதாகவும், அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது. அவரின் வருகைக்குப் பின் "கண்ணெதிரே தோன்றினாள்" தொடருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment