மெரீனா போராட்டத்தில் திடீர் திருப்பம். 1 மணி நேரத்தில் முக்கிய மாற்றம்.
- IndiaGlitz, [Wednesday,January 18 2017]
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வுடன் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பல துறைகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் நெருங்கவிடாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியே ஏற்பட்டது.
வாடிவாசல் திறந்தால் மட்டுமே வீட்டு வாசலை மிதிப்போம் என்று முழக்கமிட்டவாறு இரவுபகலாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்த இளைஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் கொண்ட குழு அமைக்க மாணவர்கள், இளைஞர்கள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டு விவேகானந்தர் இல்லம் அருகே கூட இருப்பதாகவும், அவர்கள் போராட்டக்குழுவினர் பிரதிநிதிகளாக இருந்து அனைவரின் உணர்வுகளை அரசிடம் வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்