அமெரிக்காவில் ரூ.4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற இந்திய மாணவி பரிதாப பலி: ஈவ் டீசிங் காரணமா?

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

அமெரிக்காவில் சுமார் 4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வந்த இந்திய மாணவி ஒருவர் பரிதாபமாக சாலை விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்ததால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் என்ற நகரில் படித்து வந்த இந்திய மாணவி சுதிக்‌ஷா என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக விடுமுறைக்கு சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது தாய் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவரை ஈவ்டீசிங் செய்ததாக தெரிகிறது

இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த சுதிக்‌ஷாவின் தாய்மாமா அந்த இளைஞர்களை கண்டித்த நிலையில் திடீரென அவரது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய சுதிக்‌ஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது

மிகவும் புத்திசாலி மாணவியான சுதிக்‌ஷா, டீ விற்பனை செய்யும் ஒருவரின் மகள் என்பதும், மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் 12ஆம் வகுப்பு தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர் என்பதால் அமெரிக்க கல்லூரில் ஸ்காலர்ஷிப்புடன் படிக்க இவருக்க்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது., சுதிக்‌ஷாவின் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மரணத்திற்கு காரணமான இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி ஒருவர் ஊருக்கு வந்த இடத்தில் ஈவ் டீசிங் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது