மணிரத்னம் படத்தின் திடீர் மாற்றம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 26 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ள செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிக விரைவில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு ஏற்கனவே 'டூயட்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'செலியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் எந்தவித டைட்டில் மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News