தயாரிப்பாளர் என்னை ஹோட்டலில் தங்கச் சொன்னார்? மோசமான சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,July 15 2023]

சினிமா துறையில் ஏற்கனவே காஸ்டிங் கவுச் பிரச்சனையை சில இளம் நடிகைகள் சந்தித்து வருவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்த பிரச்சனை ‘மீடூ’ சந்தர்ப்பத்தின்போது மேலும் பூதாகரமாக வெடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1994 இல் நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘கபி ஹான் கபி நா’ திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர் பாலிவுட்டில் ‘ஜஸ்பாத்‘, ‘வாடே இராதே, ‘மை வைஃப்ஸ் மர்டர்‘, ‘ரன்‘, ‘கர்மா அவுர் ஹோலி‘, ‘ஆக்‘, ‘ரோமியோ அக்பர் வால்டர்‘ எனப் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, அப்போதெல்லாம் ஹோட்டல் அறைகளில்தான் சினிமா சம்பந்தப்பட்ட சந்திப்புகள் அடிக்கடி நடக்கும். இது பொதுவானதாகவே இருந்து வந்தது. அப்படி ஒருமுறை நான் படவாய்ப்பு ஒன்றிற்காக தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் நீ யாருடன் மிகவும் நெருக்கமாக இருப்பாய்? அம்மாவா? அல்லது அப்பாவா? என்று கேள்வி கேட்டார். நான் அதற்கு எனது அப்பாவுடன் தான் அதிக பாசமாக இருப்பேன் எனத் தெரிவித்தேன்.

அதைத் தொடர்ந்து பேசிய அந்த தயாரிப்பாளர் நல்லது, உடனே உனது அப்பாவை தொடர்பு கொண்டு நாளை காலை நான் உனது வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவதாகச் சொல்விடு எனக் கூறினார். இதனால் திடுக்கிட்டு நின்ற நான் அந்த நிலைமையை புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் ஆயிற்று. கிட்டத்தட்ட எனது கண்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஒருவழியாக சுதாரித்துக் கொண்ட நான் எனது பொருட்களை எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், சினிமா துறையில் இது நிறைய நடக்கும். ஆனால் திரையுலகம் தற்போது நிறைய மாறிவிட்டது. முன்பைவிட சிறப்பாக இருக்கிறது. ஒழுங்கமைப்பட்டதாகவும் ஒழுக்கத்துடனும் இருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் இதுபோன்ற விஷயங்களை ஒரே டிவிட்டில் அம்பலப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்.

நடிகையும் பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் சேகர் கபூரை மணந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது ஆரம்பக் காலகட்டத்தில் நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் அது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்… தக்காளி விற்று ஒரே வாரத்தில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்

இந்தியா முழுக்கவே தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பிக்பாஸ் அமீர் பிறந்தநாள்.. உருகி உருகி வாழ்த்து தெரிவித்த பாவனி ரெட்டி..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் நிறுவனம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படும்

இதுக்கு மேல யாராலும் கவர்ச்சி காட்ட முடியாது: திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு

விஜய்யின் இரவு பாடசாலை.. அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

 தளபதி விஜய் இன்று முதல் தமிழக முழுவதும் இரவு பாடசாலை தொடங்க இருப்பதை அடுத்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விபத்தில் துண்டான சிறுவன் தலை… மீண்டும் பொருத்தி புது சாதனையே படைத்த மருத்துவர்கள்!

இஸ்ரேல் நாட்டில் விபத்தில் துண்டான 12 வயது சிறுவனின் தலையை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி மருத்துவர்கள்