கே பாலசந்தர் குறித்து அவதூறு பேச்சு.. கண்டனம் தெரிவித்த இயக்குனர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த சுசித்ரா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாடகி சுசித்ராவுக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், நானும் இயக்குனர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சுசித்ராவுக்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் குறித்து பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அவதூறாக பேசியதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.
தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள்.
அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாட. திருமதி.சுசித்ரா அவர்கள் திரு.கே.பாலசந்தர் அவர்களை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி திருமதி.சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாடகி சுசித்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மறைந்த இயக்குனர் குறித்து நான் தவறாக பேசினேன்” என்று இயக்குனர் சங்கம் கூறியிருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். காலம் காலமாக அந்த இயக்கம் கிரிமினல்களுக்கு மட்டும்தான் ஆதரவு அளிக்கிறது.
பதிலுக்கு, நான் ஒரு கண்டனம் தெரிவிக்கிறேன். பத்மபிரியா என்ற நடிகையை ரொம்பவே துன்புறுத்தினார்கள். அந்த நேரத்தில், பத்மபிரியா வெளிப்படையாகவே இதுகுறித்து பேசினார். ஆனால் அவரை சைலண்ட் ஆக்கி, அப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று ஆக்கினீர்களே. அதற்கு, நான் இயக்குனர் சங்கத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சுசித்ரா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com