எல்லாரையும் தம்பி, பையன்னு சொல்வாங்க.. ஆனால்.. சுசித்ரா கூறும் திடுக்கிடும் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு காரணம் அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா தான் என்று கூறப்பட்டு வருகிறது. இது குறித்த கருத்துக்கள், செய்திகள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சுசித்ரா நேற்று இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்ததை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் ஒரு எதிரியை கூட சம்பாதிக்காத மணிமேகலையை ஏன் பிரியங்கா அவ்வளவு டார்ச்சர் செய்தார் என்றால் பிரியங்காவின் பெர்சனாலிட்டி டைப்பை புரிந்து கொண்டாலே நாம் அதை தெரிந்து கொள்ளலாம்.
Queen mother Narcissist என்று சொல்வார்கள். எல்லோரையும் தன்னுடைய தம்பி பையன் என்று அடக்கி அடக்கி, அங்கே இருந்து செக்சுவல் வழிக்கு இழுப்பார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சைக்கோ என்ற திரைப்படத்தில் ஒரு அம்மா கேரக்டர் இதே போன்றது தான். சமீபத்தில் மம்முட்டி நடித்த Rorschach படத்தில் இடம்பெற்ற கேரக்டரும் இதே மாதிரி தான்.
இந்த மாதிரி கேரக்டர் உள்ளவர்கள் தகப்பனையை வீல் சேரில் வைத்து தான் மகிழ்ச்சி அடைவார்கள். ஒரு பக்கம் ஆசையாவும் இருப்பார்கள், இன்னொரு பக்கம் கொடுமையும் படுத்துவார்கள். உலகத்தையே அவ்வாறு செய்வார்கள். இன்னொரு நல்ல உதாரணம் என்றால் ’ஜூலி கணபதி’ திரைப்படத்தின் கேரக்டர் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
சுசித்ராவின் இந்த வீடியோவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் அவருடைய இன்ஸ்டாவில் பதிவாகி வருகிறது. சுசியின் கருத்துக்கு உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments