பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரு தோழிகள்: உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்ட பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர்களின் வருகையிலேயே ஓடிவிடும் என்று தெரிகிறது. நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்த நிலையில் இன்று சுசித்ரா மற்றும் சம்யுக்தா உள்ளே வருகின்றனர்.

சம்யுக்தா, சுசி ஆகிய இருவருமே பாலாஜிக்கு நெருக்கமான தோழிகள் என்பதும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பாலாவிடம் நல்ல நட்பு இருவருக்கும் இருந்தது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சம்யுக்தாவை பார்த்தவுடன் பாலாஜி கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தது பெரும் நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது என்றால் சம்யுக்தா, பாலாவை கட்டிப்பிடித்து அவருக்கு ஆறுதல் அளித்ததும் மற்றொரு நெகிழ்ச்சியாக காட்சியாக இருந்தது.

மேலும் பாலாவுக்கு சப்போர்ட் செய்வது குறித்து ரம்யாவிடம் சம்யுக்தா கேட்டபோது, ‘ஆரி, பாலாஜி இடையே சண்டை நடந்துகொண்டிருந்த போது அடிதடி ஆகிவிடக்கூடாது என்பதற்காக நான் பாலாவை கூட்டிட்டு வந்தேன். ஆனால் அதற்கு நீங்கள் பாலாவை சப்போர்ட் செய்கிறீர்கள் என்று கூறிவிட்டனர் என்று தனது ஆதங்கத்தை ரம்யா சம்யுக்தாவிடம் கொட்டினார்.

சுசி மற்றும் சம்யுக்தாவின் வருகையை அடுத்து இன்று சனம்ஷெட்டியின் வருகையை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.