தமிழகத்தில் வெற்றிப்பெற்ற பிளாஸ்மா சிகிச்சை!!! துரித நடவடிக்கையில் தமிழக அரசு!!!

 

தமிழகத்தில் கடந்த ஜுலை 22 ஆம் தேதி சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவ மனையில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை வங்கி தொடங்கி வைக்கப்பட்டது. அத்திட்டம் பின்னர் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு விரிவாக்கமும் செய்யப்பட்டது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டு அவர்கள் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக தொடங்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை வங்கி பின்னர் சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம், மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி மருத்துவப் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகம் உள்ள மாநிலமாகத் தமிழக விளங்குகிறது என்றும் தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரித்து உள்ளார். இதுவரை தமிழகத்தில் 28,92,395 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் கொரோனா நடவடிக்கைகளைக் குறித்து மிக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பிளாஸ்மா சிகிச்சை முறைகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் அதிகபடியான கொரோனா நோயாளிகளுக்கு மிக எளிதாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

More News

பறவைக்காக காரை விட்டுக்கொடுத்த பட்டத்து இளவரசர்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு

முல்லைக்கு தனது தேரை விட்டு கொடுத்த பாரி வள்ளல் குறித்த செய்தியை சங்கத் தமிழில் நாம் படித்திருக்கிறோம்

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் 'மாஸ்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து

அஜித் பட பாடலை பாடி குழந்தையை தாலாட்டிய சீன தொகுப்பாளினி!

சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி குறித்து ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். நம்ம ஊரு தொகுப்பாளினிகள் போல், கொஞ்சு தமிழில் பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து

திருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

போதும் மீரா, இதோட நிறுத்திக்கோங்க: தமிழ் நடிகை எச்சரிக்கை

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில வாரங்களாகவே முக்கிய நட்சத்திரங்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்து