கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்தின் வெற்றியால் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்!!! நடப்பது என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
Remdesivir மருந்தின் சோதனை முடிவுகளால் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். Remdesivir மருந்தின் சோதனை முடிவுகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை என்று தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோணி எஸ். பாயூசி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வெளியானது முதல் அமெரிக்கப் பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு Remdesivir மிகச் சிறந்த முறையில் பயன்தருவதாக சென்ற வாரத்தில் செய்திகள் வெளியாகின. தற்போது அந்நாட்டின் சுகாதாரத் துறையும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த மருந்தை அமெரிக்க தவிர ஆசிய நாடுகளும் கொரோனா தொற்றுநோய்க்கான சிகிச்சையில் பரிசோதித்து வருகிறது. எனவே ஆசியப் பங்குச்சந்தைகளும் இன்று காலை முதல் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது. சிகாகோ Gilead Sciences மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கொரோனோ நோயளிகளும் குறைந்தது 6 அல்லது 7 நாட்களுக்குள்ளாக வீடுதிரும்பினர் எனக் கூறப்பட்டது.
அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள்சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து செயலிழந்துவிடும். கொரோனா நாவல் வைரஸ்க்குமுன் Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின்போது நல்ல பலனை அளித்தது.
கொரோனா சிகிச்சையில் நல்ல பலனைக் கொடுப்பதாகக் கருதப்பட்ட Remdesivir மருந்து சீனா மருத்துவமனைகளில் தோல்வி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுவரை WHO கொரோனாவுக்கான சிகிச்சை மருந்து எதையும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ரோகுளோரோகுயின், இன்டர்ஃபிரான் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர Remdsivir, ritonavir/lopinavir போன்ற மருந்துகளும் சோதனையில் உள்ளன. இப்படியான நெருக்கடியில் பல நாடுகள் குணமடைந்த கொரோனா நோயளிகளிடமிருந்து அவர்களது பிளாஸ்மாக்களை பெற்று சிகிச்சைக்கு பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் மேற்கண்ட எந்த மருந்துகளிலும் உறுதியாக கொரோனா குணமடையும் என்ற நம்பிக்கையை மருத்துவ உலகம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout