குண்டர் சட்டத்தில் ஒரு மாதம் சிறையில் அடையுங்கள். முதல்வருக்கு சுப்பிரமணியன்சுவாமி கோரிக்கை

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கி என்று கூறி வாங்கிக்கட்டி கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் சசிகலாவைத்தான் முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதோடு, கவர்னருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் அறிவித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் புதியதாக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சர்ச்சைக்குரிய கோரிக்கை ஒன்றை வைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்று காலை முதல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராகவும், ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாகவும் மெரீனாவில் மீண்டும் மாணவர்கள் கூடவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனால் மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'எடப்பாடி பழனிச்சாமி அரசு சென்னை ஐகோர்ட்டில் இருந்து கலங்கரை விளக்கம் வரை, மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு போட வேண்டும் என்றும் தடையை மீறி அங்கு கூடுபவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து, ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.