ரஜினிகாந்தை தாராளமாக பாராட்டலாம். சுப்பிரமணியன் சுவாமி
- IndiaGlitz, [Saturday,March 25 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. '2.0' பட நிறுவனமான லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள சுமார் 150 வீடுகளை ரஜினிகாந்த் தனது கரங்களால் ஈழத்தமிழர்களுக்கு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ரஜினி இலங்கை செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம்' என்று சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.