கமல் கருத்து முட்டாள்தனமானதா? சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் ரசிகர்கள் பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, போராட்டக்காரர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர் இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பார் என்றும் கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழர்களை 'பொறுக்கி' என்று விமர்சனம் செய்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். கமல்ஹாசனின் கருத்து முட்டாள்தனமானது என்றும் மதுரையில் போராட்டம் நடந்த பகுதிக்கு முதல்வர் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு கமல் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருடைய சமூக வலைத்தள பக்கத்திலேயே கமல் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு கமல் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
How foolish for cinemawallah Kamalhasan to suggest that CM should have met the demonstrators. CM tried in Madurai and what happened?
— Subramanian Swamy (@Swamy39) January 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments