அக்ஷய் குமாரை அரெஸ்ட் செய்து நாடு கடத்த வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சி டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சொந்த நாடான கனடா நாட்டிற்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் பிரபல அரசியல்வாதியும் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது ’ராமர் சேது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை என்பது ராமர் சேது பாலம் ஒரு கட்டுக் கதையா? அல்லது புராண உண்மையா? என்பதை கண்டுபிடிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்யும் ஆய்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் சேது என்பது இலங்கை மன்னன் இராவணன் தனது மனைவி சீதையை கடத்திக் கொண்டு சென்றதை அடுத்து அவரை மீட்பதற்காக இலங்கை செல்வதற்காக வானரப் படையின் உதவியால் ராமரால் கட்டப்பட்ட பாலம் என்று புராணம் கூறுகிறது.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய்குமார் ’ராமர் சேது’ திரைப்படத்தில் தவறான தகவல்களை காட்டியிருக்கிறார் என்று சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘ராமர் சேது’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார். மேலும் அக்ஷய் குமார் வெளிநாட்டவர் என்பதால் அவரை கைது செய்து நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கலாம் என்று ஒரு அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The suit for compensation has been finalised by my associate Satya Sabharwal Adv. I am suing Akshay Kumar, actor & Karma Media for damages cause by falsification in portrayal of the Ram Setu issue in their film for release.
— Subramanian Swamy (@Swamy39) July 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com