மோடி அரசின் அடுத்த அட்டாக்.. A-யில் தொடங்கும் வங்கியா..?! சுப்பிரமணியன் சுவாமி.

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

மோடி தலைமையினாலான பாஜக அரசில் இந்திய நாட்டின் பொருளாதாரமானது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் கூட எதிர்பார்த்த அளவு இல்லை. நேற்று மட்டும் இந்திய பங்குச் சந்தையில் 7 லட்சம் கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே Yes பேங்க் அதிக கடன் கொடுத்து திவாலானதால் அந்த வங்கியை இப்போது RBI தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அந்த வங்கியில் பணம் போட்டவர்கள் மாதம் ரூ.50,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளிலும் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.

நிலைமை இப்படி இருக்க பாஜக ஆதரவாளர்களும் அரசும் நாட்டில் பொருளாதார மந்தநிலையே இல்லை என முக மலர்ச்சியோடு கூறிவருகின்றனர். Yes வாங்கி போல ஐசிஐசியை, ஆக்சிஸ், பேங்க் ஆஃப் பரோடா,எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகளின் பெயர்களும் திவாலாக்கலாம் என கணிக்கப்படுகின்றன.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டரில் தான் 2015-ம் ஆண்டே வங்கிகளின் வாராக்கடன் பற்றி எச்சரித்திருந்ததாகவும் திவாலாகும் வங்கிகளை RBI உடன் இணைப்பது எந்த பயனையும் தராது எனவும்.. இந்த மோசமான போருளாதர நிலையால் அடுத்தடுத்து திவாலாக 10 வங்கிகள் வரிசையில் நிற்கின்றன. அதில் ஆக்சிஸ் பேங்க் முதலாவதாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்திருந்தார்.

மேலும் மோடி அரசின் தனியார்மயமாக்கும் நடவடிக்கையையும் அவர் விமரிசித்து இருந்தார்.

TVs showing PC blasting Namo Govt on Yes Bank collapse it means”Chor machaye shor”.I had warned it was coming since 2015, because of the cartel of Pucca Chor, R3 and Shakuni. All chelas of Anil Ambani. Next will be another “A” induced. Now the queue is double digit.

— Subramanian Swamy (@Swamy39) March 7, 2020

More News

கொரோனா அச்சம்: வாரணாசி கோவிலில் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட முகக்கவசம்!!!

கொரோனா பற்றிய அச்சம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, புகழ்பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அர்ச்சகர் ஒருவர் முகக் கவசத்தை அணிவித்து உள்ளார்.

பாடாய் படுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலா??? 

இந்தியாவில் கொரோனா தொற்று 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை

ஒரே வருடத்தில் ஆறு படங்களை ரிலீஸ் செய்யும் சந்தானம்? 

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் ஒரே வருடத்தில் 10 முதல் 15  படங்களுக்கு மேல் நடித்து வந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் நடித்த படங்கள் ரிலீசாகி வந்தன

மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த 'சயிர நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கமலஹாசன் நடிக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்