ரஜினியை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்ய அமெரிக்காவுக்கு சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் கேசினோ விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் சீமான் கூறியபோது, 'நாங்கள் மக்களுக்காக போராடி வருகிறோம், ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி வருகிறார். அது முதலாளிகள் விளையாடும் விளையாட்டு, அதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை' என்று கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ரஜினிகாந்த் தனது உடல்நிலை தேற அமெரிக்காவில் கேசினோ விளையாடுகிறார். அவருக்கு எங்கே இருந்து டாலர்கள் கிடைத்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சீமானும், சுப்பிரமணியன் சுவாமியும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.