ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும், ஜனவரி மாதம் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரையும் முக்கிய பொறுப்பாளராக நியமித்து அரசியல் கட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சாமி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியின் அரசியல் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. இனி அடுத்ததாக ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் மட்டுமே போட்டி இருக்கும். பாஜக ஒரு குழப்பமான நிலையில் இருக்கும்; என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்து இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் வித்தியாசமான கருத்தை சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.