வருமான வரி அதிகாரிகள் மீது விஜய் வழக்கு போடட்டும்: பாஜக பிரமுகர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
’பிகில்’ படத்தின் வசூல் குறித்த வெளியான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அடுத்து வருமான வரித்துறையினர் அந்த படத்தின் தயாரிப்பாளர், அந்த படத்தின் பைனான்சியர் மற்றும் விஜய் ஆகிய மூவர் வீட்டிலும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடத்தினர்
இதில் தயாரிப்பாளர் வீட்டிலும் பைனான்சியர் வீட்டிலும் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 18 மணி நேரத்திற்கும் மேலாக விஜய் வீட்டில் சோதனை நடத்தியும் இதுவரை எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவசர அவசரமாக அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவருக்கு சம்மன் அனுப்பி கால அவகாசம் கொடுத்து விசாரித்து இருக்கலாம் என்றும் திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர்
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாஜக பிரமுகர் சுப்பிரமணியசுவாமி கூறியதாவது: படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால் விஜய் வழக்கு தொடரலாம். இதுகுறித்து அவர் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வழக்கு தொடரலாம். ஒன்றும் இல்லையென்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout