தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மூத்த பாஜக தலைவர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரத்தில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருக்கின்றது. மேலும் ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு சற்றுமுன்னர் சென்னை வந்துள்ள தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்பு உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.. மேலும் இவர் ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com