ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் சிலர் கடுமையாக அவரை விமர்சனம் செய்து வந்தனர். அவர்களில் ஒருவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தனது டுவிட்டர் மூலம் பேட்டியின் மூலமும் தெரிவித்து வரும் சுப்பிரமணியம் சுவாமி, இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து' என்று மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே ரஜினி ஒரு கோழை என்றும், அவர் படிக்காதவர் அதனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் கூறி வந்த சுவாமி, தற்போது அவர் அரசியலுக்கு வந்தால் ஆபத்து என்று கூறுவதை ஒரு மிரட்டலாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த மிரட்டல்களையெல்லாம் முறியடித்து அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்