கமல்ஹாசன் ஒரு முட்டாள்: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பலமுறை தரக்குறைவாக ஒருமையில் விமர்சித்துள்ளார். இதற்கு அக்கட்சியில் உள்ள தலைவர்களே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தது குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, 'பகட்டு கமல்ஹாசன் ஒரு முட்டாள், அவர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

ஒரு கட்சியில் சேருவதோ, சேராமல் இருப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்தால் முட்டாள் என்று விமர்சனம் செய்வது முதிர்ச்சியில்லாத அரசியல் என்று சுவாமிக்கு பலர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தன்னைப்பற்றிய எந்தவொரு விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துவரும் கமல்ஹாசன் நிச்சயம் வெகுவிரைவில் இந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்