பாட்டுப்பாடி, ஆட்டம் போடும் கமல் நாட்டை ஆள முடியுமா? சுப்பிரமணியன் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கண்டங்களை பெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, 'அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பொருளாதாராத்தில் ஏபிசிடி கூட தெரியாது என்று கூறினார். மேலும், 'பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல்ஹாசன் எப்படி நாட்டை ஆள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் ரஜினிகாந்த் குறித்து சுப்பிரமணியம் சுவாமி கூறுகையில், 'மோசடி ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை' என்று தெரிவித்துள்ளார். சுவாமியின் இந்த கருத்துக்கு கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com