கமல்ஹாசனை அடுத்து கருணாநிதியை வம்புக்கு இழுத்த சுப்பிரமணியன் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுடன் டுவிட்டர் போர் செய்து கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்க்க அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் பணம் பெற்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி, அறிக்கை, டுவிட்டர் பதிவுகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவில் மரணத்திற்கு பின்னர் மீனவர்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதியும், இந்திரா காந்தியும் ஒப்புக்கொண்டு தான் இலங்கைக்கு தாரை வார்த்தனர். கருணாநிதியை சம்மதிக்க வைக்க இந்திராகாந்தி அவருக்கு பணம் கொடுத்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். இதற்காக கருணாநிதியோ அல்லது திமுகவோ தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments