சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஜனவரியில் முடிந்துவிடும். சுப்பிரமணியன் சுவாமி
- IndiaGlitz, [Saturday,December 31 2016]
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இன்று சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச்ச்செயலாளராக பதவி ஏற்று கொண்டார். இந்த பதவியை சசிகலா ஏற்று கொண்டதற்கு கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்தவாறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது.,
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி, சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது: 'சசிகலா நடராஜன், அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது அவர்களின் உள்கட்சி விவகாரம். எனினும், அவர் நீண்டகாலம் அரசியலில் ஈடுபட முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் ஜனவரி மாதம் இறுதித் தீர்ப்பு வெளியாகும். அதில் சசிகலா தண்டனை பெறும்பட்சத்தில், அவருடைய அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோகும்,'' என்று கூறியுள்ளார்.