சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் தமிழக தலைவர் இவர்தான். சுப்பிரமணியன் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்ல காரணமான வழக்கை பதிவு செய்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது கூறியதாவது:
சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் வரிசையில் பல தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தியும் அவருடைய மகன் ராகுல் காந்தியும் ஒரு வரிசையில் உள்ளனர். அதேபோல் ப.சிதம்பரம் அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இன்னொரு வரிசையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இன்னொரு வரிசையில் உள்ளனர். இவர்களில் யார் வேண்டுமானாலும் அடுத்து சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
மேலும் டெல்லியில் கடந்த 28 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கூறிய சுவாமி, 'டெல்லி வெயிலில் அமர்ந்து கொண்டு தமிழக விவசாயிகள் எதற்காக போராடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து அப்போது விவசாயிகள் என்னிடம் வேண்டுகோள் வைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வென்று கொடுத்தேன். தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்குத் தண்டனை கொடுத்த போது, ராஜபக்சேவிடம் பேசி அவர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தேன். அதுபோல விவ சாயிகள் தங்கள் கோரிக்கையை என்னிடம் சொல்லியிருக்கலாமே. போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில்தான் என் வீடு இருக்கிறது. ஆனாலும் யாரும் என்னைப் பார்க்க வர வில்லை' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments