5 சீட் கொடுத்த அதிமுகவுக்கு எதற்காக மதிப்பு கொடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


Send us your feedback to audioarticles@vaarta.com


அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் தேதிமுகவுக்கு 4 தொகுதிகள் என முடிவாகி அடுத்த கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி அவர்களிடம் 'அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக, கூட்டணியின் வெற்றிக்கு உதவுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியம் சுவாமி, 'அதிமுக கூட்டணியில் எங்களுக்கு கிடைத்தது ஐந்து சீட் தான், அந்த ஐந்து சீட்டில் வெற்றி பெறுவது எப்படி என்பதே எங்கள் நோக்கம். தேமுதிகவின் தலைவலியை சமாளிப்பது அதிமுகவின் வேலை, அதுகுறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம், அதிமுகவினர்களிடம் போய் கேளுங்கள்' என்றார்.
மேலும் ஐந்து சீட் கொடுத்த அதிமுகவுக்கு நாங்கள் எதற்காக மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments