2024 பாராளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்: பிரபல அரசியல்வாதி கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனியும், சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும், அடுத்தடுத்து நேற்று தங்களது ஓய்வு முடிவை அறிவித்தால் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு வரை விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
இதனை அடுத்து தோனியின் அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்பதே அவரது அனைத்து ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகரும், ராஜ்யசபா எம்பிமான சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் ’தோனி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் மேலும் கூறியபோது ’தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார். மற்றவர்களிலிருந்து அல்ல. அவரது திறமையான தலைமையைப் பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிரூபித்த எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் கண்டிப்பாக தேவை. எனவே அவர் வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாஜக பிரமுகரான சுப்பிரமணியம் சுவாமி, தோனியை அரசியலுக்கு அழைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கௌதம் காம்பீர், நவ்ஜோத் சிங் சித்து, முகமது அசாரூதின் உள்பட பலர் அரசியலில் குதித்து தற்போது நல்ல பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தோனியும் அரசியலுக்கு செல்வாரா? அல்லது கிரிக்கெட் பயிற்சியாளர், வர்ணனையாளர் என தனது வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
M. S. Dhoni is retiring from Cricket but not from anything else. His talent-to be able to fight against odds and his inspiring leadership of a team that he has demonstrated in cricket is needed in public life. He should fight in LS General Elections in 2024.
— Subramanian Swamy (@Swamy39) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com