சுபிக்சா சுப்பிரமணியன் கைது: ரூ.750 கோடி மோசடி செய்ததாக புகார்

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

இந்திய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பலர் வங்கிகளில் கடன் பெற்று அதனை திரும்ப கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி வரும் நிலையில் இன்று ரூ.750 கோடி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக சுபிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1997ஆம் ஆண்டு ரூ.1200 கோடியில் சுபிக்சா என்ற பல்பொருள் அங்காடிகளை தமிழகம் முழுவதும் தொடங்கிய சுப்பிரமணியன் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இந்நிறுவனம் திடீரென முடங்கியது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை திருப்பி தரவில்லை என்று சுப்பிரமணியன் மீது புகார் எழுந்தது

இந்த நிலையில் சுப்பிரமணியன் திடீரென தலைமறைவானார். அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததை அடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்பிரமணியனை கைது செய்தனர். அவர் மீது 13 வங்கிகளில் ரூ.750 கோடி வரை கடன் பெற்று திருப்பி கட்டவில்லை என்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

More News

பாலிவுட் தமிழ்ப்பெண்ணிடம் பாராட்டு பெற்ற ஜோதிகா

நடிகை ஜோதிகா, 'துமாரி சுலு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் நடிக்கவுள்ளார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.

கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.