சுபஸ்ரீ விபத்தின் சிசிடிவி காட்சி! பல விமர்சனங்களுக்கு கிடைத்த விடை!
- IndiaGlitz, [Friday,September 13 2019]
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று கனடா செல்வதற்காக தேர்வு ஒன்றை எழுதிவிட்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே அரசியல் கட்சி ஒன்றின் பேனர் விழுந்தததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி பலியானார்.
இந்த விபத்து குறித்து பெரும்பாலானோர் பேனர் வைத்த அரசியல் கட்சியையும், பேனர் வைக்க அனுமதித்த அதிகாரிகளையும் விமர்சனம் செய்த நிலையில் ஒருசிலர் மட்டும் சுபஸ்ரீ வண்டி ஓட்டத்தெரியாமல் விபத்தில் சிக்கி கொண்டதாகவும், அவர் ஹெல்மெட் போடாததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோவில் சுபஸ்ரீ சரியாக வண்டி ஓட்டிகொண்டு வந்ததும், ஹெல்மெட் அணிந்தே வண்டி ஓட்டியதும், திடீரென குறுக்கே பேனர் விழுந்ததால்தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முழுக்க முழுக்க இந்த விபத்துக்கு பேனரே காரணம் என்பது சிசிடிவி காட்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒருசிலரின் விமர்சனங்களுக்கு விடை கிடைத்துள்ளது.
வாகனம் ஓட்டத்தெரியாமல், சுபஸ்ரீ லாரியில் மோதிவிட்டார்.. என்று ஏளனம் பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் இதோ... #WhoKilledShubashree #BannerkilledSubhasree #BannerKillings #AdmkKilledSubasri #CCTV pic.twitter.com/7RnSB4JFMM
— Mahalingam Ponnusamy (@mahajournalist) September 13, 2019